India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி அருகே உள்ள மங்களகிரி சேர்ந்தவர் பிரேம்குமார் (30). ஷிப்பிங் கம்பெனி ஊழியர்
இன்று பிற்பகல் இவர் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது
பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இறந்தார். இது பற்றி புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் உள்நாட்டு செவிலியர்கள் தங்களது பெயர் விவரங்களை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பகுதி சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மாணவர் சேர்க்கையில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி ஜமாபந்தி நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி ஆனது வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா வரும் 22ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜூன் மாதம் 8 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.51% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.43 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு சாலை ஓரங்களில் நடப்பட்ட மரங்கள் வாடி வருகிறது. இந்நிலையில், சிலேடையில் முகம் தெரியாத நபர்கள், தமிழக அரசு தண்ணீர் ஊற்று என எழுதி வைத்து சென்றுள்ளனர். மேலும், “மரத்தை காக்க மனமில்லாதபடி மனிதம் செத்து விட்டதை உணர்த்துகிறது. அரசை எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்காது. நாம் களமிறங்குவதே தீர்வு” என எழுதியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாணவர்கள் 89.97% பேரும், மாணவியர் 97.19% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 93.86% தேர்ச்சி விகிதம் பெற்று தூத்துக்குடி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று(மே 13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாதாந்திர பராமரிப்பு தொகை, வங்கி கடன் திருமண உதவித்தொகை போன்றவைகள் பெறுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம். இதற்காக தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.