India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு (மே.25-27) பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீசார் தாக்கியதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு 2020 இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த லயன்ஸ் ஸ்டார் விளையாட்டு கிளப் குழுவினர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதா ஜீவன் நேற்று விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கான உபகரணங்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உமர் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உலக அமைதிக்காகவும் நாட்டில் நல்லாட்சி மலரவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் தொழிலாளர்கள் தங்களது தொழிலாளர் விவரங்களை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு 10வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீரங்கன் என்பவரை தூத்துக்குடி மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நீதிபதி குற்றவாளியான ஸ்ரீரங்கனுக்கு 20வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.7,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது, இதனை அடுத்து தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டு மீனவர்கள் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தை சுத்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பேச்சிமுத்துவை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.