Tuticorin

News May 27, 2024

காதி கிராப் பொருட்கள் விற்பனை தொடக்கம்

image

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராம வாரியம் சார்பில் காதி கிராப்ட் பொருள்கள் விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் காதி கிராப்ட் பொருட்களான தேன் இயற்கை சோப்பு பவுடர் வாசனை திரவியங்கள் இடம்பெற்றுள்ளன.

News May 27, 2024

தூத்துக்குடி: காயத்துடன் வந்திறங்கிய வைகோ

image

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று மதிமுக தலைவர் வைகோ அவசர அவசரமாக காரில் தோள்பட்டையில் காயத்துடன் வந்து இறங்கினார். அப்போது அங்கிருந்த தொண்டர்களிடம் அவர் மகன் துரை வைகோ கூறிய போது நெல்லையில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க சென்றபோது வீட்டில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பூரண நலம் பெற வேண்டும் என அவரது கட்சி நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தனர்.

News May 27, 2024

திருச்செந்தூர்: மின்தடையால் நின்ற சேவை

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இருந்து நெல்லை செல்வதற்காக ரயில் வந்தது. அப்போது ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கிளம்ப தயாரான போது திடீரென மின் பாதையில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் மின்சார ரயிலானது மின்தடை ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே நின்றது. இதனால் ரயில் நேரம் தாமதமாக நெல்லை சென்றது.

News May 26, 2024

30 சமையல் எரிவாயு சிலிண்டர் பதுக்கியவர் கைது

image

தூத்துக்குடி மாவட்ட குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று புதியம்புத்தூரை சேர்ந்த தங்கராஜ் ஞானமுத்து என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் கூடுதல் விலைக்கு விற்பதற்காக 30 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலிசார் தங்கராஜ் ஞானமுத்துவை கைது செய்தனர்.

News May 26, 2024

நான்குவழிச் சாலையில் எரியாத விளக்குகள்

image

தூத்துக்குடி – எட்டையபுரம் 4 வழிச்சாலையில் ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரியின் வடபுரத்தில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையில் ஹீண்டாய் ஷோரூம் வரை கடந்த 10 நாட்களுக்கு மேலாக சாலை விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். பெரும் விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 26, 2024

மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் கைது

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தார், குளத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 74 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 26, 2024

மே.29 இல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

தூத்துக்குடி கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு வரும் 29 ஆம் தேதி தூத்துக்குடி ஜே எம் ஜே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 14 மற்றும் 16 வயது உடையவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 26, 2024

விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விருது

image

இந்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டு டென்சிங் தார்கே தேசிய சாகச விருது பெற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று கேட்டுக் கொண்டுள்ளார்

News May 26, 2024

நாளை பி எஃப் குறைதீர் நாள் கூட்டம்

image

தூத்துக்குடியில் நாளை இஎஸ்ஐ மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் இ எஸ் ஐ காப்பீட்டாளர் பயனாளர்கள் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

News May 26, 2024

விபத்தில் இறந்த இளஞரின் கண் தானம்

image

தூத்துக்குடி லெவிஞ்சுபுரத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி அன்பு ஆனந்த் (28) என்பவர் கடந்த 24ஆம் தேதி தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி பலியானார். இவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் இவரது பெற்றோர்கள் அன்பு ஆனந்தின் கண்களை நேற்று தானமாக வழங்கினர்.

error: Content is protected !!