India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழ், அறிவியல், கணிதம், வணிக அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மேலும் மாணவர் சேர்க்கைக்கு மாணவிகள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் மட்டுமே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மஜு (44). இவர் தூத்துக்குடி இபி காலனியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று பணியில் இருந்தபோது திடீரென இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜ் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கயத்தார் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரைக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று அங்குள்ள கோவில் முன் நின்று கொண்டிருந்த பரமசிவத்தை தங்கதுரையும் வேல்முருகன் என்பவரும் அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பாக தங்கதுரையை கயத்தார் போலீசார் கைது செய்து வேல்முருகனை தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற தலைவரும் தமிழ் அறிஞருமான சங்கரவள்ளி நாயகம் என்பவரின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலியை இன்று அனுசரித்து வருகின்றனர். இவரது தமிழ் நூல்கள் சமீபத்தில் அரசுடைமை ஆக்கப்பட்டு இவருடைய குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ. 10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். இவரது நினைவு தினத்தையொட்டி பல இலக்கிய அமைப்புகள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி 49ஆவது வாா்டுக்குள் ராஜபாண்டி நகா், எம்ஜிஆா் நகா் பகுதி மக்களின் கோரிக்கையின்படி, கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய் பராமரிப்பு பணிகளையும் அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நெல்லையில் இன்று நடைபெற்ற திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட உள்ள சிறப்பான வரவேற்பில் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட உள்ள சிறப்பான வரவேற்பில் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் அழைப்பு விடுத்துள்ளார்,
தூத்துக்குடியில் உள்ள கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளன. கோவில்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது இந்த கழுகுமலை. இங்குள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலை.
தூத்துக்குடி பி அன்டு டி காலனியை சேர்ந்த சண்முகவேல் பிளஸ் போர்டு அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தொழிலுக்காக மனைவியின் 12 பவுன் நகையை அவருக்குத் தெரியாமல் விற்றுள்ளார். இந்த விபரம் அவரது மனைவிக்கு தெரியவரவே கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சண்முகவேல் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரித்தனர்.
Sorry, no posts matched your criteria.