India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்படும். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தூத்துக்குடி ,கோவில்பட்டி தொகுதிகள் 21 சுற்றுகளாகவும், மற்ற 4 சட்டமன்ற தொகுதிகள் 19 சுற்றுகள் ஆகவும் எண்ணப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்,
தூத்துக்குடியில் திருச்செந்தூர், சாத்தான்குளம், நெல்லையில் நாங்குநேரி, இராதாபுரம் பகுதிகளில் ஏறத்தாழ 390 சதுர கி.மீ. பரப்பில் தேரிநிலம் காணப்படுகிறது. தேரிநிலம் என்பது தண்ணீர் தேக்கி வைக்க முடியாத வறண்ட மணற்குன்று நிலப்பகுதியாகும். நாசரேத்து, மெஞ்ஞானபுரம், சாயர்புரம் பகுதிகளில் தேரி மணல் மேடுகள் 20-50 அடிவரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து 3 நாட்களுக்கு (மே.30 – ஜூன்.1) மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் தெந்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அனைத்து மதுபான கடைகளும் அதனுடன் கூடிய பார்களும் மூடி இருக்க வேண்டும் இதனை மீறி சட்டவிரோதமாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெர்மல் நகர் ஊரணி பகுதியில் ஒரு தனியார் கம்பெனியின் பின் புறம் முள் செடிக்குள் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணா தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊர், கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இனிமேல் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் வெளியே சென்று அடையாமல் இங்கு சென்று பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலக அடையாள அட்டையை இருப்பிட சான்றாக பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு விழா தருவை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமையில் ஹாக்கி யூனிட் செயலாளர் குருசித்திர சண்முகபாரதி, ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட இணை செயலாளர் தவமணி, தீயணைப்பு துறை வீரர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சியில் பங்கு பெற்ற 50 மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே செல்லும் உப்பாற்று ஓடையை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, உப்பாற்று ஓடைக்கு செல்லும் உபரிநீர் கால்வாய்களில் முட்செடிகள், கழிவுகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரி அகற்றி மழைநீர் தடையில்லாமல் வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி திசையன்விளை பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த நிலையில் அவர் இறந்து கிடந்த போது அவரது மனைவி தூத்துக்குடியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் நேற்று அங்கு விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி பராமரிப்பு மானியம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் பருவ மானியம் பள்ளியின் வங்கி கணக்கில் விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக மேல்நிலைப்பள்ளி சங்கத்தின் தலைவர் சற்குணம் தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி ரஜினியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.