India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி மக்களவை தொகுதியை அனைவரும் உற்று கவனித்து வருகின்றனர். தூத்துக்குடியில் 2வது முறையாக கனிமொழி போட்டியிட்டுள்ளார். எனவே இத்தொகுதியின் முடிவுகளை மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2019இல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி, 35.00% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக- பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
சாத்தான்குளம் அருகே உள்ள கழுங்குவிலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகர், ஆசா தம்பதினர். இவர்களுக்கு இடையே நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் பிரபாகர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சவேரியார் புரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று சோரீஸ்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கையில் அண்ணா நகரை சேர்ந்த பொன்ராஜ் (24) என்ற வாலிபர் அவரை வழிமறித்து பணம் கேட்டு அறிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிப்காட் போலீசார் பொன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள ரத்னாபுரி பகுதியை சேர்ந்த மகாராஜன் (38) என்பவர் கடந்த 30ம் தேதி ஆறுமுகநேரி அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில் அரசு சார்பில் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூரில் இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடலில் ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட அலையில் சிக்கி ஒருவர் மேல் ஒருவர் மோதியதில் 9 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 9 பேரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சுனில். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று தனது தாயுடன் பள்ளி ஆசிரியை திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது நான்காம் ரயில்வே கேட் அருகே டிம்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சிறுவன் சுனில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப் புதூர் சுங்க சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது. கார், ஜீப், வேன் மற்றும் இலகு ரக வாகனத்திற்கு ரூ.5 முதல் ரூ.20, இலகு ரக வணிக வாகனங்களுக்கும் ரூ.5 கட்டணம் உயருகிறது. கனரக வாகனங்களுக்கு அதேபோல் கட்டணம் உயருகிறது.
கயத்தாறு, சாலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி மனைவி பூவரசி (28). இவரது மகன் கவீஷ் என்பவருடன் நேற்று ராஜபுதுக்குடி அருகே தனியார் ஓட்டலில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு டூவிலரில் சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மகன் கவீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் \அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று இன்று தெரிவித்துள்ளார். வருகின்ற ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இன்று தூத்துக்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதிகமான தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.