Tuticorin

News March 23, 2025

தூத்துக்குடி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News March 23, 2025

தூத்துக்குடியில் கணிணி பட்டா வழங்கும் நிகழ்வு

image

தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து கடந்த மாதம் கணினி பட்டா இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு முதல் தவணையாக 150 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பட்டாக்களை பயனாளிகளிடம் வழங்கினார்.

News March 23, 2025

பைக் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு அபராதம்

image

துாத்துக்குடி, மேலசண்முகபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த, அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்து, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து சட்டங்களை மீறாமல் விழிப்புணர்வுடன் செயல்பட மாணவர்களுக்கு பகிருங்கள்

News March 23, 2025

லாரி மோதியதில் செவிலியர் பலி

image

துாத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் டொமினிக் அண்டோ மனைவி மரிய அன்பரசி(37); தனியார் மருத்துவமனை செவிலியர். இவர், திருச்செந்துார் — துாத்துக்குடி சாலையில் நேற்று மாலை, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதி, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார், கரூர் குளித்தலை, கொப்பாளப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் உதயகுமார், (38)என்பவரை கைது செய்தனர்.

News March 23, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News March 22, 2025

ரயில் பயணிகளை ஈர்க்கும் கடம்பூர் போளி; தெரிஞ்சிக்கோங்க

image

கடம்பூர் வழியாக ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் கடம்பூர் வந்ததும் தலையை எட்டிப் பார்ப்பார்கள். காரணம் வேறொன்றுமில்லை, மிகவும் சுவையான கடம்பூர் போளியை வாங்குவதற்காக தான். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் இந்த போளியை, கடம்பூரைச் சேர்ந்த ராம சுப்பையர், கிருஷ்ண ஐயர் 1960 இல் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார்கள். நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? *புது தகவல்னா ஷேர் பண்ணுங்க*

News March 22, 2025

தூத்துக்குடியில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் குறித்தான பயிற்சி 24-ல் துவங்கி ஏப்.,13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக விண்ணப்பம் அளித்து இதில் கலந்து கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கடந்த 2 நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி இருந்து விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உப்பு வயல்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 22, 2025

தூத்துக்குடி டைட்டல் பார்க்கில் வேலை! ரூ.50000 வரை சம்பவளம்

image

தூத்துக்குடி டைடல் பார்க் நிறுவனங்களில், மேனேஜர், டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ மற்றும் பிற பட்டதாரிகள் ஏப்.,2ஆம் தேதி வரை விண்ணப்பிக்காலம். <>உடனே apply பண்ணுங்க<<>>. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 22, 2025

விரால் மீன்களின் இனப்பெருக்கம் உற்பத்தி குறித்து பயிற்சி

image

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 03.04.2025 அன்று நடைபெற உள்ளது. விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!