India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணபப்படுகிறது. இதில் முதல் சுற்றில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி 11914 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஜெபமணி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்குகள் என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாவது சுற்றில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக 15 ஆயிரத்து 952 வாக்குகளும், அதிமுக 4038 வாக்குகளும், பாஜக கூட்டணி கட்சியான தமாகா 600 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3131 வாக்குகளும் பெற்றுள்ளது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது. இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் நாம் தமிழர் கட்சி 1,423 வாக்குகள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் திமுக 5343 வாக்குகள், நாம் தமிழர் 1423, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 1388 வாக்குகள் பெற்றுள்ளது. தற்போது 2-வது சுற்று வாக்குகள் என்னும் பணி நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து இவிஎம் இயந்திரத்தின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் திமுக அமைப்பாளர் கனிமொழி முன்னணியில் உள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போது சட்டசபை தொகுதி வாரியாக ஈவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முன்னணி நிலவரம் சற்று நேரத்தில் தெரியவரும்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது திமுக வேட்பாளர் கனிமொழி முன்னணியில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 66.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக சார்பில் ஆர்.சி.சிவசாமி வேலுமணி, தமாகா வேட்பாளர் விஜயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள புகார் குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி புகார் குழு அமைக்க மகளிர் உரிமை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.