India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அளவில் பாஜக கூட்டணி ஆனது பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதனைக் கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னணியில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் அவருக்கு விளாத்திகுளம் தொகுதியில் மட்டும் இரண்டு சுற்று முடிவுகளில் 3265 வாக்குகள் கிடைத்துள்ளன. மற்ற தொகுதிகளில் எல்லாம் மிகக் குறைவாகவே வாக்குகள் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் இரண்டு சுற்றுகள் முடிவில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 10830 வாக்குகளே கடந்த தேர்தலை விட நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னணியில் இருந்து வருகிறார் . இரண்டாவது சுற்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கனிமொழி 25885 ,அதிமுக வேட்பாளர் 7176 வாக்குகள் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். இந்த நிலையில் வேட்பாளர் கனிமொழி 1,39.770 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது சுற்று தேர்தல் முடிவுகள் படி தி.மு.க 5109, அ.தி.மு.க – 994, பா.ஜ.க கூட்டணி – 1009, நாம் தமிழர் – 869 ஆகிய வாக்குகள் பெற்று 3வது சுற்று முடிவில் உள்ளது. தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறன. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் முன்னணியில் இருந்து வந்த நிலையில் முதல் சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் கனிமொழி 29618 வாக்குகளும். அதிமுக வேட்பாளர் 6963 வாக்குகளும் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போட்டியிட்ட நிலையில் தற்போது திமுக முன்னணியில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக திமுக வேட்பாளர் கனிமொழி தற்போது 21,959 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்று நடைபெற்று வரும் நிலையில் திமுக 30334, அதிமுக 8375, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 5271, நாம் தமிழர் கட்சி 4446, வாக்குகளும் பெற்றுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடுத்தடுத்த சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாவது சுற்றில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக 15 ஆயிரத்து 952 வாக்குகளும், அதிமுக 4038 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 3600 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.