Tuticorin

News June 5, 2024

தூத்துக்குடியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்

image

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:1. கனிமொழி (திமுக) – 540729 2. சிவசாமி வேலுமணி (அதிமுக) – 147991 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன்(த.மா.கா.) – 122380 4. ரொவீனா ரூத் ஜோன் (நா.த.க.) – 120300 5. என்பி ராஜா (நாம் இந்தியர் கட்சி) – 6640மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 6072 – 290 வாக்குகள் பெற்றுள்ளனர். நோட்டாவில் 9682 வாக்குகள் பதிவானது.

News June 4, 2024

தபால் வாக்குகளிலும் கனிமொழி முன்னிலை

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதன்படி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 2850 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 584 வாக்குகளும், த. மா க வேட்பாளர் 700 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 920 வாக்குகளும் பெற்றிருந்தனர். தபால் வாக்குகளில் கனிமொழி முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

27 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவக்கத்திலிருந்து முன்னணியில் இருந்து வந்த கனிமொழி இறுதியில் 5, 37, 879 வாக்குகள் பெற்று மெகா வெற்றி பெற்றார். மேலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக, த மா க ,நாம் தமிழர் வேட்பாளர் உட்பட 27 பேர் என அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்துள்ளார்

News June 4, 2024

தூத்துக்குடி: திமுக வெற்றி!

image

2024 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,467 வாக்குகளும், பாஜக-தமாகா வேட்பாளர் விஜயசீலன் 1,21,680 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன்1,19,286 பெற்று தோல்வியைத் தழுவினர்.

News June 4, 2024

3,90,412 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் தி.மு.க 5,37,879 வாக்குகள், அ.தி.மு.க 1,47,467 வாக்குகள், த.மா.கா 1,21,680 வாக்குகள், நாம் தமிழர் 1,19,286 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி 3,90,412 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தபால் வாக்குகள் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

News June 4, 2024

2,87,088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. 14 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் 3,94,704 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 1,07,616 வாக்குகள், தமாகா வேட்பாளர் 86,749 வாக்குகள், நாம் தமிழர்வேட்பாளர் 86,608 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் கனிமொழி 2,87,088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தூத்துக்குடியை கைப்பற்றினார் கனிமொழி

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதியில் மட்டுமே தற்போது வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வருகிறது. மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிந்துள்ளது. எனவே தூத்துக்குடி தொகுதியில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார் என தகவல் தெரிந்ததும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

News June 4, 2024

BREAKING: தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி உறுதி

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 4,25,178 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,27,222, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலன் 92076 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெவீனா ரூத் ஜேன் 88,884 வாக்குகளும் பெற்றுள்ளனர். எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட கனிமொழி வாக்குகள் அதிக வித்தியாசத்தில் உள்ளதால் அவர் வெற்றி உறுதியானது.

News June 4, 2024

சுமார் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 5,11,226 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சிவசாமி 1,50,100 வாக்குகள் பெற்றுள்ளார். கனிமொழி சுமார் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் வேட்பாளர்

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ண படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி ஐந்து சுற்றுக்கள் வரை நான்காவது இடத்தில் இருந்தது. ஆறாவது சுற்று வடிவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

error: Content is protected !!