India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி வட்டத்தில் வரும் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது. தூத்துக்குடி வட்டத்தில் 1433ம் பசலிக்கான கிராம கணக்குகளை தணிக்கை செய்திடும் வருவாய்த் தீர்வாயம் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களால் 11.06.2024 முதல்; தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பிரதி தினம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வரும் 10ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்; தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,12,000 கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு அறையில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டையில் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மாணவர்கள் மேற்கூறிய பள்ளியில் தவறாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு அறையில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டையில் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மாணவர்கள் மேற்கூறிய பள்ளியில் தவறாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பரமன்குறிச்சி அருகே உள்ள முந்திரி தோப்பை சேர்ந்தவர் ஜெய்சங்கர்.பாஜக பிரமுகர். இவர் தனது நண்பர்களிடம் கோவையில் பாஜக வெற்றி பெறும். இல்லையென்றால் தான் மொட்டை அடித்துக் கொள்வதாக சவால் விட்டுள்ளார். கோவையில் பாஜக தோல்வி அடையவே இன்று ஜெய்சங்கர் தான் சவால் விட்டபடி மொட்டை அடித்துக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் தூத்துக்குடியில் உள்ள தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தட்டார்மடம் அருகே உள்ள அழகம்மாள் புரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவரது வீட்டில் கடந்த இரண்டாம் தேதி இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனது. இது தொடர்பாக தட்டார் மடம் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த், ராஜன் ஆகிய இருவரை கைது செய்து திருடு போன நகைகளை மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் கனிமொழி – 5,40,729 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி- 1,47,991 வாக்குகள்
*தமாகா வேட்பாளர் விஜயசீலன் – 1,22,380 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் – 1,20,300 வாக்குகள்
18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று(ஜூன் 4) வெளியானது. இதில் இதில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பூத்தில் 432 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் அதிமுக மற்றும் த.மா.கா வேட்பாளர் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தனர். மற்ற வாக்குகளை திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தது.
Sorry, no posts matched your criteria.