Tuticorin

News June 7, 2024

வேலைவாய்ப்பற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற விரும்பும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

தூத்துக்குடி: இரு நாட்களுக்கு எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன்.8 & 9) மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News June 7, 2024

இலவச நவீன செயற்கை கால், கை வழங்கும் முகாம்

image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில்  இலவச நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் முகாமை கடந்த 9, 12 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாம்களில் கலந்து கொண்டு அளவீடு செய்த பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கி பொருத்தும் சிறப்பு முகாம் வரும் 29ஆம் தேதி  காலை 8.30 மணியளவில் கல்லூரியில்  நடைபெறவுள்ளது. இதில் பயனாளிகள் தவறாது கலந்து கொண்டு வேண்டும் என்றனர்.

News June 7, 2024

ஜீவன் ரக்க்ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மத்திய அரசு நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல் தீ விபத்துக்கள் நிலச்சரிவு சுரங்க மீட்பு போன்ற நடவடிக்கைகளில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்க விருது வழங்கி வருகிறது. இந்த விருதினை பெற தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் இம்மாத 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று கேட்டுக் கொண்டுள்ளார்

News June 7, 2024

ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணம் 

image

இந்து அறநிலையத்துறை சார்பில் முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளுக்கு 60 வயது முதல் 70 வயது உட்பட்டோர் இலவசமாக ஆன்மீகப் பயணம் அழைத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக 202 பக்தர்களை திருச்செந்தூரிலிருந்து ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணமாக அழைத்துச் செல்கின்றனர்.

News June 7, 2024

செயலி மூலம் நிலஅளவை விவரங்களை பெறலாம் – ஆட்சியர் 

image

பொதுமக்கள் இணையதளம் மற்றும் “தமிழ் நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயனடையலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tngov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது.  இந்நிலையில் “தமிழ் நிலம்” என்ற கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

News June 7, 2024

கோவில்பட்டியில் இரட்டை கொலை

image

கோவில்பட்டியில் முன் விரோதம் காரணமாக மீன் கடை வியாபாரி செல்லதுரை, சாமி  ஆகிய 2 பேரை நள்ளிரவில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News June 7, 2024

தேமுதிக நிர்வாகி வலியுறுத்தல்

image

விருதுநகரில் முறைகேடாக வெற்றி பெற்றுள்ள மாணிக் தாகூர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டுமென தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.  வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். 

News June 6, 2024

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் பலி

image

ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் மகன் விக்னேஷ் (32). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் செல்வகுமார். இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தில் நடந்த கொலை வழக்கில் கைது செயப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர்.  இந்த நிலையில் அவர் நேற்று திடீரென உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 6, 2024

தூத்துக்குடி : மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!