India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ள கூடத்தில் பல்வேறு பொருட்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சக அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உடன் இருந்தனர்.
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற 5 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இரண்டாவது கால் இறுதி போட்டியில் புதுச்சேரி ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சேலம் அணியினரை வெற்றி பெற்றனர். மூன்றாவது கால் இறுதி போட்டியில் நாளை காலை அரை இறுதிப்போட்டியும் நாளை மாலை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது.
கயத்தாறு அருகே கரிசல்குளம் கிராமத்தில் குருசாமி பிள்ளை மகன்கள் சுப்பையா, சங்கரபாண்டிஆகியோருக்கு இட பிரச்சனைகள் காரணமாக நேற்று சங்கர பாண்டியன் அண்ணன் மனைவிசண்முகலட்சுமியைஉன்னால்தான்எனக்கும்எனதுஅண்ணனுக்கும் சண்டைவருகிறது என கூறிமறைத்துவைத்திருந்த அறிவாளால் சண்முக லட்சுமி சங்கரபாண்டி வெட்டினார். போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் – மனைவியான பாக்கியஸ்வரன் (49) வசந்தலட்சுமி (42) ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் இருவரது உடலையும் மீட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் 200 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 58,373 விண்ணப்பதாரர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகளை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர் அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (49). இவர், இன்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடற்கரையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துாத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பொன்குமரன் என்பவர் போட்டியிட்டார். இவர், தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய அரசியல் கட்சிகளின் விதிமீறல்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் அவ்வப்போது புகார் மனு அளித்தார். இந்நிலையில், அவர் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையர்கள் 8 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் கடத்த 5 மாதங்களில் கடத்தப்பட இருந்த 40.990 டன் ரேசன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 109 பேர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 35 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனம் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை சாலை ஓரங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று மதிய உணவு வழங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று தூத்துக்குடியில் சாலையோரங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு இருக்கும் இடம் சென்று மதிய உணவு வழங்கப்பட்டது.
முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ். இவர் பத்து வயது சிறுமி ஒருவருக்கு கடந்த 2022 ல் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இவர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று ஆசிரியர் ஆனந்தராஜிற்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிதியில் இருந்து ரூபாய் இரண்டு லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.