India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை கடல் பகுதியில் இன்று முதல் நாளை இரவு வரை கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, கடற்கரையோர பகுதிகளில் பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் மீனவர்கள் இன்று முதல் 14ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டி முத்தையா மால் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக இன்று காலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நகராட்சி தொடக்கப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை நற்பணி இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமையில் நற்பணி இயக்கத்தை சேர்ந்த கண்ணன் பள்ளி சீருடைகளை வழங்கினார். நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், மதிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் எடிசன். மீனவரான இவர் நேற்று முன்தினம் முத்தையா புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் உட்பட 3 பேர் இவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் உதயமாா்த்தாண்டம் சாமிக்கால்விளையைச் சோ்ந்தவர் ரமேஷ்குமாா் (40). கட்டடத் தொழிலாளியான இவா் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜாபுதுக்குடி பெட்ரோல் நிலையம் அருகே பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(10) முதல் கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்க உள்ளது. இதில் அனைத்து ஊரக கிராம பகுதிகளிலும் இம்மாதம் 30 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளதால் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நாளை மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 4 தேர்வு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 200 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் தூத்துக்குடியில் தூய மரியன்னை பள்ளியில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சேர்ந்த மாரி செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் பாம்பு கார்த்திக் என்பவரை கோவில்பட்டி போலீசாரும் எஸ்பி-யின் தனிப்பிரிவு போலீசாரும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பாம்பு கார்த்திகை சென்னையில் கைது செய்ததாக பாம்பு கார்த்திக்கின் தாயார் பேச்சியம்மாள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் திடீரென வந்து கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதன்படி மாவட்டம் முழுவதும் மற்றும் 13 அமர்வுகள் நடந்தது. இதில் மொத்தமாக 3,210 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2,285 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது. இதில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு நிவாரணம் மற்றும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மாரிகாளை மற்றும் கருப்பசாமி ஆகியோர் தலைமை வகித்து வழக்குகளை சமரசமாக தீர்த்து வைத்தனர். இதில் மொத்தமாக 698 வழக்குகள் தீர்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் மொத்தமாக 402 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.