India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தலுக்காக மாற்றப்பட்ட பழைய இடத்திலேயே பணியிடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என வருவாய்த்துறை, காவல்துறை உட்பட பல்வேறு துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் ஏற்கனவே தற்போது பணிபுரிந்த இடத்தில் சிறிது காலம் மட்டுமே பணிபுரிந்தமையால் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் மீண்டும் பணியிட மாற்றம் செய்ய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(ஜூலை 13) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்தூர், தெற்காத்தூர், தலைவன் விடலி கீரனூர், ஆறுமுகநேரி, பேயன்விலை, காயல்பட்டினம், வீரபாண்டிய பட்டினம், திருச்செந்தூர், குரும்பூர் காயாமொழி சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் – மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ல் காவல்துறை விசாரணையின்போது தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் 9 பேர் மீது மதுரை முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று(ஜூன் 11) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விசாரணை அதிகாரி ஆஜர் ஆகாததால் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. நாளை முத்துசாமிபுரம் வடக்கு சிலுக்கன்பட்டி அய்யனடைப்பு ராமநாதபுரம் தளவாய்புரம் பேரூரணி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடை பெறுவதால் கிராம மக்கள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு வேன் பிரச்சார இன்று(ஜூன் 11) துவங்கியது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 344 மனுக்களை பெற்றுகொண்டாா் . மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கூட்டுறவு நியாயவிலை கடையில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா எடை சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா பொருள்களின் தரம் எவ்வாறு உள்ளது என அப்போது ஆய்வு மேற்கொண்டார்,
தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கூட்டுறவு நியாயவிலை கடையில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா எடை சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா பொருள்களின் தரம் எவ்வாறு உள்ளது என அப்போது ஆய்வு மேற்கொண்டார்,
கோடை விடுமுறைக்கு பின்பு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று சத்துணவுடன் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இதனை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவர்களுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி வேப்பலோடை திருச்செந்தூர் நாகலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளி மற்றும் தனியார் , சுயநிதி தொழிற்பெயர்ச்சி பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் இம்மாதம் ஏழாம் தேதியாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது வரும் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.