India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு (13 ஜூன் – 17 ஜூன்) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மருதூரை சேர்ந்தவர் ஆறுமுக கனி. இவருக்கும் இவரது சித்தப்பா கல்யாணி என்பவருக்கும் மாடு விற்றதில் 2016 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுமுககனி கல்யாணியை வெட்டி கொலை செய்து அவரது தலையை தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் பிள்ளையார் கோவிலில் வைத்து சென்றுவிட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆறுமுக கனிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் தலைமையில் இன்று(ஜூன் 12) ’குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் விதிமுறைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று(ஜூன் 12) குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 35 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க எஸ் பி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நேற்று(ஜூன் 11) மாவட்ட முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 12 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 170 மது பாட்டில்களையும் ரூபாய் 7420 பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கூட்டுறவு வங்கிகள் மூலம் தனி நபர்களுக்கு ரூ 30 லட்சமும்,கைவினை கவிஞர்களுக்கு 10 லட்சமும், சுய உதவி குழுக்களுக்கு 15 லட்சமும், கல்வி கடனாக 20 லட்சமும் வழங்கப்பட்டு வருவதாகவும் இதனை சிறுபான்மையினர் பயன்படுத்தி கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை இரவு 11.30 வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் முன்னறிவிப்பின்றி தோன்றும் கடல்சீற்றமே கள்ளக்கடல் எனப்படும். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாலை முதல் வேம்பார் வரை நாளை இரவு வரை 2.6 மீ வரை கடல் அலை எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 126 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை இன்று(ஜூன் 12) தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்தார்.
தூத்துக்குடி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர்.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு முறை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று(ஜூன் 12) குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான எதிர்ப்பு முறை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.