India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும் 17 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக பெயர் சேர்க்க 11,554 படிவங்களும், பெயர் நீக்க 976 படிவங்களும், பெயர் திருத்த முகவரி மாற்ற 8,136 படிவங்களும், ஆதார் இணைக்க 13 படிவங்களும் என மொத்தம் 20,679 படிவங்கள் வரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது சம்பந்தமான மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது சம்பந்தமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்; ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இதன் மூலம் கடைசி ஆணியும் அறையப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று(நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்தி பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னேற்பாடுடன் செல்வது நல்லது. SHARE IT.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(நவ.,16) பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 42 மில்லி மீட்டர் மழையும், கோவில்பட்டியில் 24 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் பரவலாக 161.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கார்த்திகை மாத முதல் தேதியை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் நேற்று(நவ.,16) காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. தொடர்ந்து, இரவு கோயில் பிரகாரங்களில் பக்தர்கள் குடும்பத்தோடு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பௌர்ணமி முடிந்த 2ஆம் நாளான நேற்று(நவம்பர் 16) இரவு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் பௌர்ணமி நிலவு தரிசனம் மேற்கொண்டனர். பிரமாண்ட நிலவு மாலை 6.30 மணிக்கு மேல் தோன்றியது. இதைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டனர். நிலவு தோன்றியதும் அதைப் பலர் படம் பிடித்து ரசித்த வண்ணம் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(நவ.,16) பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த வகையில் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேட்மா நகரத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய தார் சாலை பணிகளை நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள துணை மின் அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த கண்ணன்(49). ஜூனியர் இன்ஜினியராக வேலைபார்க்கிறார். நேற்று முன்தினம்(நவ.14) பணியில் இருந்த கண்ணன், அலுவலகத்தில் தனியாக இருந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய, சாத்தான்குளம் போலீசார் நேற்று(நவ.15) கண்ணனை கைது செய்தனர்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நல குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சுரேஷ் சங்கையா உடல் கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.