India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய மைதானத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காவல்துறையினருக்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமை வகித்து ஜமாபந்தி முகாமை நடத்தி வைத்தார். இதில் மொத்தமாக 915 மனுக்கள் வாங்கப்பட்டது. அவற்றில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் லட்சுமிபதி செய்திருந்தார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராம உதவியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமாக 77 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டி ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மாவட்ட அளவிலான போட்டிகள் கோவில்பட்டியில் ஜீலை.6, 7 ஆம் தேதியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 38 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் ஜூலை 1 ஆம் தேதிக்குள் 94870 49966 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சித்தார்த்தன் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 21 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (59). இவருக்கும் இவரது அண்ணன் மனைவி செண்பகவல்லி (53) என்பவருக்கும் இடையே ஏற்கனவே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று செண்பகவல்லி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வெங்கடேஸ்வரன் செண்பகவல்லியை அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 11-ம் தேதி அண்ணா நகரை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்ற வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட லெவிஞ்சி புரத்தை சேர்ந்த சங்கர், கோபிநாத், மணிகண்டன், ராம்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததை அடுத்து 4 பேரும் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் புதிய குடும்ப அட்டை கோருதல் குடும்ப அட்டையில் பெயர் முகவரி மாற்றுதல் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல தனியார் ஐஸ் நிறுவன தயாரிப்புகளில் சரியான தயாரிப்பு பொருட்களை சேர்க்காததால் அந்த நிறுவனத்தின் 6 வகையான ஐஸ் கிரீம்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தடை விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.