Tuticorin

News June 17, 2024

லாட்டரி விற்பனை செய்தவர் கைது

image

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் நேற்று மாலை லெவிஞ்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த சிவந்தா குளத்தை சேர்ந்த விஜயபாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 15 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.800 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 17, 2024

சமரச வழக்கு சிறப்பு முன் அமர்வு

image

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண சிறப்பு முன் அமர்வு தூத்துக்குடியில் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்,

News June 17, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – எம்.பி.கனிமொழி

image

நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை தேவை என தூத்துக்குடி எம்.பி.கனிமொழி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள X பதிவில், கருணை மதிப்பெண்கள், பாடத்திட்ட முரண்பாடுகள், பயிற்சி மையத்தின் தாக்கங்கள், பரவலான முறைகேடுகள் போன்றவை மாணவர்களின் கனவுகளை சிதைக்கின்றன. விளிம்பு நிலை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

News June 16, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்-தூத்துக்குடி எம்.பி.கனிமொழி

image

நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை தேவை என தூத்துக்குடி எம்.பி.கனிமொழி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள X பதிவில், கருணை மதிப்பெண்கள், பாடத்திட்ட முரண்பாடுகள், பயிற்சி மையத்தின் தாக்கங்கள், பரவலான முறைகேடுகள் போன்றவை மாணவர்களின் கனவுகளை சிதைக்கின்றன. விளிம்பு நிலை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

News June 16, 2024

பழமை வாய்ந்த கல் மண்டபம் சீரமைக்கப்படுமா?

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தெப்பக்குளத்திற்கு வட திசையில் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள பழமை வாய்ந்த கல் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மண்டபமானது அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த மண்டபத்தை புதுப்பிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.

News June 16, 2024

திருச்செந்தூர்: அரசு பேருந்தில் கஞ்சா பொட்டலம்

image

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று வந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் மர்ம பை ஒன்று இருந்ததை கண்டு அதன் ஓட்டுனர் உடையதுல்லா (37) என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News June 15, 2024

சாத்தான்குளம் பகுதியில் வேலை செய்யாத TACTV கேபிள்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், செட்டிகுளம், நொச்சிக்குளம், கொம்பன்குளம், முதலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தற்போது வரை டேக் டிவி கேபிள் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் பொழுதுபோக்கான டிவியை பார்க்க முடியாமல் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.

News June 15, 2024

கோவில் தகராறு 16 பேர் மீது வழக்கு

image

தூத்துக்குடி அருகே உள்ள மேல கூட்டுடன் காட்டில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரவு செலவு கணக்கு சம்பந்தமாக இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று புதுக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் இரு கோஷ்டிகள் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News June 15, 2024

பிரீ பையர் கேம் வாலிபருக்கு கத்திகுத்து

image

தூத்துக்குடி ஆரோக்கியாபுரத்தைச் சேர்ந்தவர் அஜின் (19) இவரிடம் நேற்று மேல அலங்கார தட்டையை சேர்ந்த ஷியாம் டேனியல் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் அஜினின் பிரீ பையர் கேம் ஐடியை கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 15, 2024

தூத்துக்குடி: 10% வருமான வரி ரிட்டன் தாக்கல்

image

தூத்துக்குடியில் நேற்று அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் வருமான வரித்துறையும் இணைந்து வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் வருமானவரித்துறை இணை ஆணையர் மனோஜ் பிரகாஷ் கலந்துகொண்டு பேசுகையில், “வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 10 % பேர் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!