Tuticorin

News August 14, 2024

தூத்துக்குடி வஉசி கல்லூரி இந்திய அளவில் சாதனை

image

தூத்துக்குடி வஉசி கல்லூரி இந்திய தேசிய தர வரிசை பட்டியல் 2024-ல் இந்திய அளவில் 28வது இடமும், தமிழக அளவில் 8வது இடமும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 103 கல்லூரிகளில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இது கல்லூரியின் வரலாற்றில் ஓர் மைல்கல் என்றால் மிகையல்ல என்று கல்லூரி முதல்வர் வீரபாகு இன்று தெரிவித்தார்.

News August 14, 2024

தூத்துக்குடி பள்ளிகளுக்கு ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011க்கும் முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்கள், வரன்முறை அனுமதி இசைவு பெற 31-1-2025 க்குள் www.tcp.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரன்முறை அனுமதி இசைவு சான்று பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 14, 2024

விளையாட்டுப் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக வருகின்ற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியை அனுகலாம்.

News August 14, 2024

பதவியேற்ற முதல் நாளிலேயே எஸ்பி விறுவிறுப்பு

image

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் இன்று (ஆக.14) பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே பொது மக்களிடம் 33 மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த உடனே அந்தந்த சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டார்.

News August 14, 2024

தூத்துக்குடி முன்னாள் எஸ்.பி.க்கு ஜனாதிபதி விருது

image

சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கெளரவிக்கிறார். இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல்துறையினருக்கு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் காவல்துறை தலைவர் கண்ணன் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய பாலாஜி சரவணன் உள்ளிட்ட 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2024

தூத்துக்குடி – பாலக்காடு ரயில் அட்டவணை வெளியீடு

image

பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடிக்கு நாளை முதல் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலானது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான கால அட்டவணை இன்று தென்னக ரயில்வே சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு நாள் இரவிலும் இரவு 10 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக பாலக்காட்டில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது தூத்துக்குடிக்கு காலை 6.40 மணிக்கு வந்து சேரும்.

News August 14, 2024

தூத்துக்குடி பயணிகள் ரயில் சேவை ரத்து

image

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் வரும் 18ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் இன்று(ஆக.14) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வண்டி எண் 06667 தூத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு நெல்லைக்கு செல்லும் ரயிலும், நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு காலை 7:35 மணிக்கு செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

News August 14, 2024

தூத்துக்குடியில் 4100 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக மாற்றிட காவல்துறையினர் ‘மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று சாத்தான்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியோடு சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 4100 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி 1,35,000 பொதுமக்களிடம் குற்ற செயல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News August 13, 2024

இரவு காவல்துறையின் அவசர கால எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

மதுக்கடைகள் மூடல் -ஆட்சியர் அறிவிப்பு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபான கடைகள் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!