India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி ஏராளமானோர் பலியானதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக கோரி தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நாளை(ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவிடி சிக்னல் அருகே காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் திரளாகக் கலந்து கொள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இயந்திரம் பொருத்திய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டார்,
தூத்துக்குடியில் உள்ள இந்திரா நகர் மாநகராட்சி பள்ளியில் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கதை சொல்லும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. பொம்மலாட்ட கலைஞர் சக்திவேல் இதில் கலந்துகொண்டு கதைகளை கூறியதுடன் மாணவர்களுக்கு சிரிப்பு சிந்தனை என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மது மற்றும் போதைப் பொருள்கள் புழக்கத்தில் இருந்தால் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 10581மற்றும் காவல்துறை whatsapp எண் 8300014567 மற்றும் 95 14 14 4100 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் அளிப்பவர் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டை சேர்ந்தவர் கரன் (28). நேற்று முன்தினம் இரவு பைக்கில் பெண் ஒருவருக்கு லிப்ட் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ் நகரை சேர்ந்த அந்த பெண்ணின் உறவினர்கள் முருகன் உட்பட 3 பேர் நேற்று கரனை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் தாக்குதல் நடத்தியவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வானத்தில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கொத்துக்கொத்தாக கீழே விழுந்து உயிரிழந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழே விழுந்து உயிருக்கு போராடிய காகங்களை இளைஞர்கள் மீட்டு உயிர்காக்க போராடிய மனிதநேய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் போலீசார் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக இரவு பகலாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
கடல் சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தூத்துக்குடி மண்டல அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2023 – 24ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ரூ.60,524 கோடி கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 17,81,602 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.67 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது, அப்போது வழக்கு விசாரணையை இம்மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை தங்களையும் இணைத்துக் கொள்ள தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக வாதாட இன்று தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி உள்ளார். இந்நிலையில் அமலாக்க துறை வழக்கறிஞர் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாதாடி வருகிறார்.
Sorry, no posts matched your criteria.