India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு நாளே ஆன ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு குடல் அடைப்பு இருப்பதை கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைக்க வைத்தனர். அரசு மருத்துவர்களின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. வழக்கத்தை விட நேற்று அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று மட்டும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 922 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த குழுவினர் பாரம்பரிய வள்ளி கும்மி நடனமாடி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு சுமார் 150 பேர் கொண்ட குழுவினர் பாடலுக்கு நடனம் ஆடினர். இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் கடந்த 7
மாதங்களில் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடத்துள்ளன . இதில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 3 பேர் இறந்துள்ளனர். இதனால், இப் பகுதியில் விபத்து பகுதி என்று எச்சரிக்கை போர்டும், வேகத் தடைகளும் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 37 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 கடைகளுக்கு ரூ.6,85,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கயத்தாறு அருகே உள்ள ஆலாந்தா கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (75). இவரது மகன் சின்னத்துரைக்கு தெரியாமல் தோட்டத்தை விற்றார். இதனையறிந்த சின்னத்துரை (45), இன்று காலை கருப்பசாமியை சுமோ கார் ஏற்றி கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் சின்னத்துரையை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அரசின் துணி நூல் துறை; தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்கு, htps://tn textiles in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏரல், முக்காணி கிராமம் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள முக்காணி என்ற இடத்தில் சாலையோரம் நின்று தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாந்தி, பார்வதி, அமராவதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.