India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி டாக்டர் மாரியப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிக்கோடின் கலந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விபுரத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சமுதாய நல்லிணக்க கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கலந்து கொண்டனர். இதில் குற்றச் செயல்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஆனி மாத வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28 ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் – மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காவல்துறையுடன் இணைந்து நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததாக 37 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான கழகம் சார்பில் கொத்தனார், கம்பி வளைப்பவர், எலக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் ஒரு வாரம் முதல் 3 மாதம் வரை பயிற்சி ஜூன் 3 தேதி தையூரில் துவங்க உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பால்குளத்தை சேர்ந்தவர் பிரஜாபதி. இவர் கடந்த ஏழாம் தேதி தமிழக முதல்வர், கனிமொழி எம்பி ஆகியோர் மீது சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பினார்.இது சம்பந்தமாக இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை (ஜூன் 27) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை மறுநாள் (ஜூன்.27) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
18ஆவது மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி இன்று 2வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார். நடந்து வரும் 2ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தூத்துக்குடி தொகுதியில், கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரை விட 3.92 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Sorry, no posts matched your criteria.