Tuticorin

News June 29, 2024

தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 தொகுதி 2-க்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச வழிகாட்டும் பயிற்சி, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடுத்த மாதம் 8ஆம் தேதி துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நல வாரியங்களில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவியாளர் நேற்று(ஜூன் 28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி இம்முகாம் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆழ்வார் திருநகரி ஆகிய வட்டங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

மாணவர்களுக்கு மாநில செஸ் போட்டி

image

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான சதுரங்க போட்டியை ஜூலை மாதம் 14ஆம் தேதி நடத்த உள்ளது. வயது அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 11ஆம் தேதிக்குள் 98658 30030 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News June 28, 2024

ஜூலை.1 இல் அக்னி வீரர்கள் தேர்வு

image

தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகின்ற ஜூலை.1 முதல் 5 ஆம் தேதி வரை ராணுவத்தில் சேர்வதற்கான அக்னி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்த திருச்சி,கரூர்,பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News June 28, 2024

நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்க மானியம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழிகள் வளர்க்க அரசு 50% மானியம் வழங்குகிறது.இதன் மூலம் 250 நாட்டுக் கோழி குஞ்சுகள் மற்றும் கொட்டகை அமைக்க ரூ.1,56,875 மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம்,கால்நடை மருத்துவரை அனுகி ஜூலை.10 க்குள் விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 146 பேர் கைது

image

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புனர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா,போதை பொருள் கடத்தல் தொடர்பாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் கட்டணமில்லா 9498410581 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

News June 27, 2024

தனிநபர் கடன் பெற ஆட்சியர் அழைப்பு 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு டாப் செட்கோ நிறுவன மூலம் 6% முதல் 8% வரை ஆண்டு வட்டியில் ரூ.15 லட்சம் கடன் வழங்கப்பட உள்ளது. இதில் சிறு தொழில் செய்வோர், விவசாயத் தொழில் உள்ளிட்ட பல தொழில்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளதாக  ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதில் விண்ணப்புக்க விரும்புவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News June 27, 2024

தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீடு வழக்கு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் இரண்டாம் கட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையர் திருமலை முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில் ஏராளமான மனுக்கள் மீது விசாரணை நடந்தது.

News June 27, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 146 பேர் கைது

image

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நேற்று நடந்த சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா போதை பொருள் கடத்தல் தொடர்பாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News June 27, 2024

மீனவர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை

image

தூத்துக்குடி கடற் பகுதியில் கடந்த 2 நாட்களில் இரண்டு ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனை கைப்பற்றிய வனத்துறையினர் ஆமைகள் எவ்வாறு இறந்தன என ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மீனவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!