India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அடுத்த மாதம் 7 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும்; அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதையில் மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது; தூய்மையான களிமண்ணால் செய்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அனுமதியளித்த எனது தாயார் ராசாத்தி கருணாநிதி, இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கலைஞர் கருணாநிதியின் படைப்புகள் அனைத்தும் இதன் மூலம் அதிக அளவிலான மக்களிடம் சென்றடையும் என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் விதைப்பு பணிகள் தேவைக்காக வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் 23.6 மெ. டன், கம்பு 0.135 மெ .டன், உளுந்து 43.83 மெ.டன், நிலக்கடலை 0.9 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்றைய செய்தி குறிப்பை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வரும் 30ஆம் தேதி சமையல் எரிவாயு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு விநியோகஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் நுகர்வோர்கள் தங்கள் குறைகள் மற்றும் புது எரிவாயு இணைப்பு தாமதம் போன்றவைகள் சம்பந்தமாக மனுக்களாக அளிக்கலாம் என ஆட்சியரின் செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய வரன்முறை இசைவு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு ஏற்கனவே முடிந்தது. இந்நிலையில் கருணை அடிப்படையில் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை வரன்முறை இசைவு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேசிய குடற்புழு நீக்கும் முகாம் அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு 30ஆம் தேதி முகாம் நடக்க உள்ளது. மாவட்டத்தில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 566 குழந்தைகளுக்கும் 1,10,459 தாய்மார்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 58 கல்லூரிகளில் படிக்கும் 6,466 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர், நாசரேத் உள்பட 106 ரயில் நிலையங்களில் க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 106 ரயில் நிலையங்களில் க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் பயணிகளின் தேவையற்ற காத்திருப்புகளை தவிர்த்து, துரித பயணங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை துறை இணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின்கீழ் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் (DAK GHAR NIRYAT KENDRA) 2022ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஏற்றுமதியாளர்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. எனவே இந்த சேவையை பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் (பொ) சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.