India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில் காவல்துறையில் மகளிர் பங்காற்ற தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் காவல்துறையினர் பயன்படுத்தும் வாகனங்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களின் நிலை, பழுது செய்யப்பட வேண்டியவைகள் பற்றி கேட்டறிந்ததுடன் வாகனம் ஓட்டும் காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டுக்கான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூபாய் 58.56 கோடியும், பாசிப்பயிருக்கு ரூபாய் 14.161 கோடியும் மொத்தம் ரூபாய் 72.721கோடி என 35,607 விவசாயிகளுக்கு இப்போ -டோக்கியோ காப்பீடு நிறுவனம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரின் நேற்றைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திலீப் குமார் திமுக மருத்துவ அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தந்தை ராஜகண்ணப்பனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 350 இடங்கள் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் நேற்று (ஆக.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று (ஆக.23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள திமுக கட்சியினர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாஞ்சி மணியாச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கொரோனா காலத்திற்கு முன்னதாக நின்று சென்ற நிலையில் தற்போது நிற்பதில்லை. இதை அடுத்து ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா ஏற்கனவே நின்று சென்ற ரயில்களுக்கு நிறுத்தம் கோரி இன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீவஷ்தவா வை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், நிறுத்தப்படாத பட்சத்தில் செப்டம்பர் 6 போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (23.08.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம், திருச்செந்தூர், மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தான்குளம் போன்ற பகுதிகளில் நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசரத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏதேனும் பாலியல் தொந்தரவு, குழந்தைத் திருமணம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் போன்ற புகார்களை 1098 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ் பி அறிவுறுத்தி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.