India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நாளை (ஆக.28) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார் தாரர்கள், காவல் நிலையங்களில் 3 மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி மனு அளிக்கலாம்.
முதலமைச்சர் கோப்பை காக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவினருக்கு விளையாட்டுப் போட்டிகள் மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டியில் பதிவு செய்ய கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர்.2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எட்டயபுரம் அருகில் சப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜ கமலேஷ்(15), அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினமான நேற்று(ஆக.26) கமலேஷ் நண்ர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் ஒரு தேள் கொட்டியதாம். இதில் உடலில் விஷம் ஏறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், மணியாச்சி, கோவில்பட்டி. சாத்தான்குளம் போன்ற பகுதிகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. மேலும் 100 அல்லது 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் துறைமுகம், விமான நிலையம் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் குரங்கு அம்மை நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட குரங்கு அம்மை சிறப்பு வார்ட் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள கூச்சாலிப்பட்டியில் உள்ள கிணற்றில் தாமஸ் நகரை சேர்ந்த ஆகாஷ் (14), பூசாரிபட்டியைச் சேர்ந்த ஜான் (14) ஆகிய இரண்டு மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் இருவரின் உடலையும் மீட்டனர்.
முக்காணி தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை குளிக்கச்சென்ற திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) நீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து மாயமான வாலிபரை தேடும் பணியில் திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (ஆக.26) காலை அவரது உடலை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடும் போது இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் காவல்துறையை அழைப்பதற்கு தினமும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பெயர், அலைப்பேசி எண்கள் காவல்துறையால் வெளியிடப்படும்.அந்த வகையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உளுந்து பாசி மற்றும் சிறுதானிய தரமான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிரியல் காரணிகள் போன்றவை 50 சதவீத மானியத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 24.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.