India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஆக28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேறு மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களில் தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் e-Shram வலைதளத்தில் பதிவு செய்து பொது விநியோக திட்டத்தின் கீழ் புதிய மின்னணு அட்டை பெற்று கொள்ளலாம். இது தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலகத்தினை அணுகலாம்” என தெரிவித்துள்ளார்.
கயத்தாறு ஒன்றிய புதிய தமிழகம் கட்சி சார்பில் சூர்யா மஹாலில் நடந்த புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கலந்தாய்வு கூட்டத்தில், மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி ஆலோசனை வழங்கினார். முன்னதாக புதிய பேருந்து நிலையம் முன்பு கட்சி கொடியேற்றி வைத்தார்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடி பாஸ்போர்ட் சேவை மையங்களில் 30.08.2024 ஒருநாள் மட்டும் பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது. அன்றைய தேதிக்கு ஏற்கனவே முன் அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப முன் அனுமதியை மறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு 0452-2521205 என்ற எண்ணிற்கு தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் பாசனம் அமைக்க ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்தார். நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வேளாண்மை தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நுண்ணீர் பாசனம் அமைத்து பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திரு நாட்களில் தற்காலிக கடைகள் மற்றும் மிட்டாய் கடைகள் அமைக்க வியாபாரிகள் வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெரும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொழிற்சங்கங்களுடன் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை வழக்கம் போல் வேலைகள் நடக்கும் என்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஐஎன்டியூசி அகில இந்திய அமைப்புச் செயலாளர் கதிர்வேல், சிஐடியு செயலாளர் ரசல் ஆகியோர் நேற்று அறிவித்துள்ளனர்.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்புரிந்த 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று பாராட்டுப் பத்திரமும், ரூ. 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 30.09.2024 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.அதன்படி எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 1:50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு எழும்பூர் சென்றடையும். புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 27.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.