Tuticorin

News August 29, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதியும் இரவு நேரங்களில் அச்சமின்றி இருக்கும் வகையிலும் மாவட்டம் முழுமைக்கும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News August 29, 2024

பாஸ்போர்ட் சேவைகள் நாளை நடைபெறாது 

image

மதுரை மண்டல அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள், கோச்சடை, திருநெல்வேலி தபால் நிலைய மையங்கள், கொடைரோடு, போடிநாயக்கனுார், ராமநாதபுரம், தேவகோட்டை, விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி, நாகர்கோவில் மையங்களில் பணிகள் நாளை ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

image

சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்ப்பீர் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் நிலையங்களில் குற்றவாளிகள் புகைப்படத்தை தவறாக சித்தரித்து செய்து பணம் கேட்டு மிரட்டுவார்கள். எனவே சமூக வலைதளத்தில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

தூத்துக்குடி நூலகத்தில் சிறப்பு மாதிரி தேர்வு

image

தூத்துக்குடி மாவட்ட நூலகங்களில் வரும் செப்டம்பர் மாதம் 1 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த துளிர் அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே இதனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 29, 2024

தூத்துக்குடி இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் மாவட்டஆட்சியர் இளம் பகவத் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

தூத்துக்குடி இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் மாவட்டஆட்சியர் இளம் பகவத் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் இயங்கும் நியாயவிலை கடைகளில் மாதத்தின் கடைசி நாள் பொருள்கள் வினியோகம் செய்யப்படுவதில்லை. இருப்பினும் அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 31ஆம் தேதி நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

News August 29, 2024

தூத்துக்குடியில் மழை இன்று மழைக்கு வாய்ப்பு

image

பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா நேற்று தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 28, 2024

தூத்துக்குடி எஸ்.பி ஆபிஸில் குறைதீர் முகாம்

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (28.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்று மனுக்களை வழங்கினர்.

News August 28, 2024

இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஆக28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!