India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் மாசு ஏற்படுத்தாத களிமண் போன்ற பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்; அவைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை, பின்பற்றி தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், வேம்பார், முத்தையாபுரம் கடல் பகுதியில் மட்டும் கரைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 7 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, பொதுமக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய விதிமுறைகள் குறித்து, விநாயகர் சிலை வைக்கும் பொறுப்பாளர்களுடான கலந்தாய்வு கூட்டம், தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில், இன்று (30.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
செப்டம்பர் 11 ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அஞ்சலி செலுத்த வாகனங்களில் செல்வோர் செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளில் உட்கோட்ட காவல் அலுவலகங்களில் வாகனம் எண், செல்பவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை குறிப்பிட்டு அனுமதி பெற தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு, ‘SEED” (Scheme for Economic Empowerment DNT’s) திட்டம் மைய அரசால் செயல்படுத்த பட்டு வருகிறது. எனவே தகுதியுள்ள பயனாளிகள் www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி ஆல்கலி கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று பராமரிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் பணியில் இருந்த ஹரிஹரன் என்பவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறையில் தகவல் உரிமை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் தமிழ்நாடு தகவல் உரிமை அறியும் சட்ட ஆணையர் முனைவர் செல்வராஜ் கலந்துகொண்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.
உமரிக்காடு கிராம விவசாய சங்கத் தலைவர் கார்த்தீசன் தலைமையிலான விவசாயிகள், ஆட்சியர் இளம் பகவத்திடம் நேற்று மனு அளித்தனர். அதில், முக்காணியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மழைக்காலம் வருவதற்குள் ஆற்றங்கரையினை உயரமாக அமைத்து பலப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நாளை(ஆக.31) கலைஞரின் கனவு இல்ல திட்டப்படி பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை ஆய்வு கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.