Tuticorin

News August 31, 2024

தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து news update

image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தில் அமைந்துள்ள சிவசக்தி பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், விஜய், கண்ணன் என்ற இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே முதல் கருகி பலியானார்கள், மேலும் சில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News August 31, 2024

தூத்துக்குடி பட்டாசு ஆலையில் விபத்து – 2 பேர் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் சிவசக்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில், இன்று மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 2 பேர் பலியானதாகவும் சிலர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 31, 2024

தூத்துக்குடியில் இறந்தவருக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு

image

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் நேற்று அம்மோனியா கசிவு ஏற்பட்டதில் ஹரிகரன் என்பவர் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடும் ரூபாய் 10 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அடக்க செலவு ரூபாய் 2 லட்சம் என மொத்தமா ரூ.37,00000 ஆலை நிர்வாகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News August 31, 2024

செப்.5 வரை ரேஷனில் ஆகஸ்ட் மாத பொருட்களை பெறலாம்

image

தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில், அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 5 வரை ஆகஸ்ட் மாத பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 5 வரை ஆகஸ்ட் மாதம் வாங்காத பொருட்களை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

News August 31, 2024

வந்தே பாரத் ரயிலுக்கான பயண கட்டணம் அறிவிப்பு

image

சென்னை எழும்பூரில் இருந்து இன்று முதல் இயக்க படுகின்ற வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு காலையில் துவங்கியது. இந்நிலையில் வண்டி எண்: 20627 சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டிக்கு முற்பகல் 11:35 மணிக்கு வந்து சேரும். நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2:20 க்கு புறப்பட்டு கோவில்பட்டிக்கு மாலை 4 மணி அளவில் வந்து சேரும் இந்த ரயிலுக்கு ₹1510 முன்பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது

News August 31, 2024

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் திட்டம் அறிமுகம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேற்று(ஆக.30) செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், “விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில், வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 வழங்கும் திட்டம் உள்ளது. தகுதியான விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 31, 2024

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் திட்டம் அறிமுகம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில், வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000 வழங்கும் திட்டம் உள்ளது. இதற்கு, தகுதியான விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 31, 2024

தூத்துக்குடியின் ஆன்மீக பக்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு 60 வயதிற்கு மேற்பட்ட 1000 பக்தர்கள் தமிழக அரசால் அழைத்து செல்லப்படுவர். தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு ஒரு பயண திட்டமும் அடுத்த மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இந்த ஆன்மிக பயணத்திற்கு https://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 31, 2024

தூத்துக்குடி ஆட்சியர் செய்தி வெளியீடு

image

தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் மாசு ஏற்படுத்தாத களிமண் போன்ற பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்;  அவைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை, பின்பற்றி தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், வேம்பார், முத்தையாபுரம் கடல் பகுதியில் மட்டும் கரைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

News August 30, 2024

காவல்துறை சார்பில் இரவு நேர உதவி எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!