India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூரில் இருந்து காலை 8.15 க்கு புறப்பட்டு திருநெல்வேலி வரை செல்லும் வண்டி எண் 06674 மற்றும் மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 க்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரை செல்லும் வண்டி எண் 06409 ஆகிய இரு ரயில்களும் திருநெல்வேலி டிராக் பணி காரணமாக நிறுத்தி வைக்கப்படும் என பொய் தகவல் பரவியது. இந்நிலையில், இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 31) ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆலையின் உரிமையாளர் ராம்குமார் என்பவரை நாசரேத் போலீசார் சிறிது நேரத்திற்கு முன்பு கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்க படும் என்று தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரை ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாகர்கோவிலில் இருந்து நெல்லை, கோவில்பட்டி வழியாக சென்னை தாம்பரத்திற்கு இந்த ரயில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியானது, மாவட்டத்திலுள்ள காவல் அலுவலக வளாக மைதானத்தில் வைத்து இன்று (31.08.2024) காலையில் நடைபெற்றது. இந்த கவாத்து பயிற்சியை மாவட்டத்தின் எஸ்பி ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று ஆய்வு செய்து காவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 31.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் முத்து கண்ணன் / விஜய் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களுக்கான அறிவுரை கூட்டம், இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
நெல்லை சரக டிஐஜி மூர்த்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கூகுள் பிளே ஸ்டோரில் கிரிண்டர் என்ற செயலி உள்ளது. இந்த செயலின் மூலம் தெரியாதவர்களிடம் பழகி, பணம் மற்றும் பொருட்களை பறித்தல் தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி பகுதிகளில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.