Tuticorin

News September 2, 2024

தூத்துக்குடி வெடி விபத்து: கிருஷ்ணசாமி அறிக்கை

image

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாசரேத் அருகே உள்ள குறிப்பாகுளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது; இது எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல; இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News September 2, 2024

முன்னாள் அமைச்சருக்கு மக்கள் நாயகன் விருது

image

கோவில்பட்டி தாமரை மஹாலில் கழுகுமலை ஆரா விஸ்வாஸ் அகாடமி மற்றும் தாமரை நாட்டியாலயா சார்பில் குரு சமர்பணம் – டேலண்டீனா -2024 என்ற அபாகஸ், வேத கணிதம், நாட்டிய திறனை வெளிப்படுத்தும் விழா நடைபெற்றது. நிகழ்வை, கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ தீபச்சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விழாக்குழு சார்பில் அவருக்கு மக்கள் நாயகன் விருது வழங்கப்பட்டது.

News September 2, 2024

தொழிற்சாலை வெடி விபத்து – கிருஷ்ணசாமி இரங்கல்

image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிச்சான் குளத்தில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 2, 2024

தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் குறைப்பு

image

தூத்துக்குடியில் உள்ள புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் நேற்று (செப்.1) முதல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கார், ஜீப், மினி பஸ் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் குறைக்கப்படவில்லை. இந்த கட்டண குறைப்பு கண் துடைப்பு என்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாகன ஓட்டிகள் விமர்சிக்கின்றனர்.

News September 2, 2024

கொடியன்குளம் சம்பவம் – டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

image

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொடியன்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, கொடியன்குளம் கிராமம் தாக்கப்பட்ட தினத்தை மனித உரிமையின் மீட்பு நாளாக புதிய தமிழகம் கட்சி அனுசரித்து வருகிறது. அதன்படி கட்சியின் சார்பில் 30வது ஆண்டு தினத்தை மனித உரிமையின் மீட்பு நாள் கடைபிடிக்கப்பட்டது என்று பேசினார்.

News September 2, 2024

தூத்துக்குடியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (செப்.2) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அவ்வப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 2, 2024

திருச்செந்தூர் – நெல்லை ரயில் வழக்கம் போல் இயங்கும்

image

திருச்செந்தூரில் இருந்து காலை 8.15 க்கு புறப்பட்டு திருநெல்வேலி வரை செல்லும் வண்டி எண் 06674 மற்றும் மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 க்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரை செல்லும் வண்டி எண் 06409 ஆகிய இரு ரயில்களும் திருநெல்வேலி டிராக் பணி காரணமாக நிறுத்தி வைக்கப்படும் என பொய் தகவல் பரவியது. இந்நிலையில், இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

News September 2, 2024

திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் வழக்கம் போல் இயங்கும்

image

திருச்செந்தூரில் இருந்து காலை 8.15 க்கு புறப்பட்டு திருநெல்வேலி வரை செல்லும் வண்டி எண் 06674 மற்றும் மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 க்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரை செல்லும் வண்டி எண் 06409 ஆகிய இரு ரயில்களும் திருநெல்வேலி டிராக் பணி காரணமாக நிறுத்தி வைக்கப்படும் என பொய் தகவல் பரவியது. இந்நிலையில், இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

News September 1, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 1, 2024

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 31) ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆலையின் உரிமையாளர் ராம்குமார் என்பவரை நாசரேத் போலீசார் சிறிது நேரத்திற்கு முன்பு கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!