India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியின் வ.உ.சி. கல்லூரியில், கப்பல் ஓட்டிய தமிழர் மற்றும் செக்கு இழுத்த செம்மல், விடுதலை போராட்ட தியாகி, தமிழறிஞர் வ.உ.சி.யின் 153வது பிறந்த நாள் விழாவும் “SWADESHI STEAM” நூல் அறிமுக விழாவும் வருகிற செப்டம்பர் 5ஆம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வ.உ.சி. பிறந்த நாளின் விழா குழுவின் தலைவர் பொன் வெங்கடேஷ் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் சங்கரலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(செ.03) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி வட்டத்தில் வரும் 18ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு முன்னோடியாக முள்ளக்காடு, மீளவிட்டான், கீழதட்டபாறை, முடிவைத்தானேந்தல் கூட்டுடன் காடு ஆகிய பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் வரும் 6ம் தேதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண்: 06039 தாம்பரத்தில் இருந்து இரவு 10:25 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டிக்கு நாளை காலை 9:25 மணிக்கு வந்து சேரும். மீண்டும் நாளை இரவு 11:25 மணிக்கு கோவில்பட்டியில் புறப்பட்டு, நாளை மறுநாள் காலை 11:25 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருள்களை அறுவடைக்குப்பின் பாதுகாக்க சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்கு பழுக்க வைக்கும் அறை போன்றவைகளை வேளாண் தொடர் திட்டத்தின் மூலம் செயல்படுத்த வங்கிகளில் கடன் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக முன்னாள் மீனவ சங்கத் தலைவரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், இன்று (செப்.3) விசைப்படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க விசைப்படகில் சென்றனர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. சுமார் 2442 டன் எடை கொண்ட இந்த கப்பல், வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி வரை தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்தில் நிற்கும் என்று கப்பற்படை நிர்வாக இயக்குனர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் இந்த கப்பலை நேரடியாக பார்வையிடலாம்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. சுமார் 2442 டன் எடை கொண்ட இந்த கப்பல், வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி வரை தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்தில் நிற்கும் என்று கப்பற்படை நிர்வாக இயக்குனர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் இந்த கப்பலை நேரடியாக பார்வையிடலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பயிலகங்களில் போதை பொருள் மற்றும் பெண்களுக்கு, மாணவியர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013-இன் கீழ் உள்ள புகார்கள் குழுவின் (ICC) சார்பில் காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.