India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மொத்தமாக இதில் 87 புகார்கள் பெறப்பட்டு அதற்கு உரிய தீர்வுகள் அளிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 04.09.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியின் மீனவர்களை பிடித்து வைத்துள்ள இலங்கை நீதிமன்றத்தில் வரும் 10ஆம் தேதி வழக்கு விசாரணை நடக்க உள்ளது. இதில் 10 மீனவர்களுக்கும் அபராதத் தொகை விதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு, சிறையில் வாடும் 22 மீனவர்களையும், 2 விசை படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ குடும்பத்தினர் இன்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுகள் நாளை வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை பெர்சியா ஞானமணி, காயாமொழி பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணன், உடன்குடி பள்ளி தலைமை ஆசிரியர் சாரோன் சுதா, ஆத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்சன் சஞ்சித்சிங், பணிக்கநாடார் குடியிருப்பு பள்ளி ஆசிரியர் ராஜகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். (42) முன்னாள் ராணுவ வீரர். நேற்று இவர் மது அருந்த சென்று விட்டு வீட்டுக்கு வந்த பொழுது தன்னை நான்கு பேர் தாக்கியதாக தெரிவித்துள்ளார். பின்னர் மயங்கியவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது வழியிலே பரிதாபமாக இறந்துள்ளார். இது சம்பந்தமாக கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
துாத்துக்குடி மாவட்ட ஆட்சியரக 3வது தளத்தில் கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த பிரிவில், கணக்கு அதிகாரியாக மறவன்மடத்தை சேர்ந்த தமிழ்செல்வி (43) என்பவர் ஒப்பந்த ஊழியராக 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2 மாதமாக பணிக்கு வரவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் விசாரித்தபோது ரூ.60 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. தற்போது, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி- மாலத்தீவு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ஆம் தேதி வரை முதல் கட்டமாக 7 மாதங்கள் இந்த சேவை நடக்க இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு 500 கடல் நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் இந்த தூரத்தை கடக்க 2½ நாட்கள் வரை ஆகும் என்று கப்பற்படை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
விவசாய தேவைகளுக்காக கத்தார் நாட்டில் இருந்து 48,000 டன் யூரியா உர மூட்டைகள் தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த உர மூடைகள் தற்பொழுது பைகளில் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 2000 டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றவை பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்பப்பட உள்ளன.
“ஏடிஎம் கார்டு புதுப்பித்தல், இலவச பரிசு கூப்பன், ஸ்டார் ரேட்டிங்ஸ் கொடுப்பதனால் வருமானம் போன்ற எந்தவொரு தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தியில் பதில் அளித்து உங்கள் வங்கி கணக்கு விபரங்கள் அல்லது தனிப்பட்ட விபரங்களை யாரிடமும் பகிராதீர்கள். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காவல் நிலையத்தில் மனு அளித்து திருப்தி அளிக்காத புகார்கள் மற்றும் காவல் நிலையத்தில் 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் கிடக்கும் மனுக்களை புகாராக அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.