Tuticorin

News September 5, 2024

சிறந்த தனியார் நிறுவனத்திற்கு கடனுதவி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை செயல்பாடுகளுடன் கூடிய நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதன் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 5, 2024

ஆதிதிராவிட மாணவர்களுக்கு முக்கிய செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள பிரபல பயிற்சி நிறுவனங்களுடன் சேர்ந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு மாணவர்கள் <>https://www.tahdco.com/<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #SHARE பண்ணுங்க.

News September 5, 2024

சிறப்பு ரயிலின் நேரம் மாற்றி அமைப்பு

image

திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி வழியே ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் (எண்: 06070) திருநெல்வேலியில் இருந்து மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, கோவில்பட்டிக்கு இன்று இரவு 7:45 மணிக்கு வரும். இந்நிலையில், ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில்பட்டியை வழியே இயக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 5, 2024

தூத்துக்குடி வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இவ்வாறு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உட்கோட்ட நிர்வாக நடுவர் முன்னிலையில் நன்னடத்தை பிணை ஆவணம் சமர்ப்பித்த பின்னரே கடையை திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

தூத்துக்குடி விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சத்து மிகுந்த தானியங்கள் வழங்குவது தொடர்பாக இந்த நிதியாண்டிற்கு 2.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இது குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள உழவன் செயலின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

தொழிற்சங்கவாதி வ.உ.சி.யை நினைவு கூறுவோம்

image

இந்தியாவில் முதல் தொழிலாளர்கள் அரசியல் வேலை நிறுத்தம் 1908ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள கோரல் மில் ஆலையில் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தம் செய்தவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆவார். அதேபோல தென்னிந்தியாவில் ரயில்வே தொழிலாளர் சங்கங்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவரும் வ.உ.சி தான் என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவு கூறுவோம்.

News September 5, 2024

உதயநிதி ஸ்டாலினின் தூத்துக்குடி வருகை ரத்து

image

தூத்துக்குடியில் வரும் 9ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஊராட்சிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதுடன் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளையும் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News September 5, 2024

மிலாடி நபி பற்றி முக்கிய அறிவிப்பு

image

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான மிலாடி நபி விழா பிறை தெரிந்த 12 நாட்கள் கழித்து கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் இன்று பிறை தெரியாத காரணத்தால் மிலாடி நபி விழா 16ஆம் தேதிக்கு பதில் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தூத்துக்குடி தலைமை ஹாஜி முஜிபூர் ரகுமான் நேற்று தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

திருச்செந்தூர் நகராட்சியை முற்றுகையிட மக்கள் அறிவிப்பு

image

திருச்செந்தூர் நகராட்சியில் துர்நாற்றம் வீசும், மக்கள் உயிரை பழி வாங்கும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை தோப்பூர் பகுதியில் இருந்து அகற்றிட வேண்டும். இல்லையென்றால் 9ஆம் தேதி திருச்செந்தூர் நகராட்சியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தோப்பூர் ஊர் பொதுமக்கள் நேற்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

News September 5, 2024

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் வ.உ.சி பிறந்த நாள் விழா

image

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை கோவில்பட்டி காந்தி மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருஉருவச்சலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினர்.

error: Content is protected !!