Tuticorin

News September 7, 2024

பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு துவக்கம்

image

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை, ஜனவரி 13 ல் இருந்து 17 வரை 5 நாட்கள் கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழக அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் வெளியூரில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ரயில் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக, 120 நாட்களுக்கு முன்னர் அதாவது வருகின்ற செப். 12 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News September 6, 2024

இன்றைய இரவு நேர நோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.6) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

அரசு தொழிற்பயிற்சி பள்ளி சேர்க்கை நீடிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம், வேப்பலோடை, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தேதி முடிவடைந்தது. இந்நிலையில், தற்போது சேர்க்கை தேதி வரும் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் 2வது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13ஆம் தேதி நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

பெண் சிசு கொலை அமைச்சர் கீதா ஜீவன் வருத்தம்

image

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில் நடந்த பெண் சிசுக்கொலை குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது சமூகநலத்துறையின் மூலம் பெண்களை காப்போம் கற்பிப்போம் என விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிற நிலையில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள் சமூக நலத்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்

News September 6, 2024

திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் ரத்து

image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூரில் இருந்து காலை 8.30 புறப்பட்டு திருநெல்வேலி வரை செல்லும் வண்டி எண் 06674, திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 புறப்பட்டு திருச்செந்தூர் வரை செல்லும் வண்டி எண் 06409 ஆகிய இரு ரயில்களும் அக். 03 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News September 6, 2024

மீண்டும் தூத்துக்குடி-நெல்லை பயணிகள் ரயில்

image

பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை இயங்கி வந்த பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இதனாக் தூத்துக்குடி – நெல்லை ரயில் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ரயில் பயணிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து, அடுத்த ஆறு மாதங்களுக்கு ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து தூத்துக்குடி – நெல்லை பயணிகள் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News September 5, 2024

அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சமூகநலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் சமூக நல துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News September 5, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (05.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

தொல்லியல் துறை இயக்குனருக்கு கனிமொழி வாழ்த்து

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “தமிழர்களின் தாய்மடியான கீழடியை உலகறியச் செய்தவர்களில் ஒருவரான தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்தியத் தொல்லியல்துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
அவர் மேலும் பல ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் இந்திய வரலாற்றையே உலகறிய செய்யவும், மேன்மேலும் உயரங்களை அடையவும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்

error: Content is protected !!