India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (அக்21) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 26 ஆம் தேதி தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், உதயநிதி பிறந்தநாளை கொண்டாடுவது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
உடன்குடி அருகே சத்யா நகரை சேர்ந்த ராஜவேல் மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி மாணவியை அவரது வீட்டு அருகில் வசிக்கும் காளி(22) என்பவர் கேலி செய்துள்ளார். இதனை தட்டி கேட்டதில் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவியின் அப்பா உட்பட 4 பேரை நேற்று இரவு காளி தரப்பினர் அரிவாளா் வெட்டியுள்ளனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தயாரிப்பாளரும், பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா இயக்குனருமான பாண்டிராஜ் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்தார். இன்று புதிய படப்பூஜை இருப்பதால் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஆண்டுதோறும் காவல்துறை சார்பில் அக்டோபர் 21ஆம் தேதி பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வீர வணக்க நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று (21) காலை 7:45 மணிக்கு அங்குள்ள காவலர்கள் நினைவு ஸ்துபி யில் எஸ்பி தலைமையில் மரியாதை செலுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பையில் (அக்.,20) நடைபெறும் அதிமுகவின் 53ம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகை தந்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் புத்தகம் வழங்கி வரவேற்றார். உடன், திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துடன் இருந்த தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தனி மாவட்டமாக உதயமானது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தூத்துக்குடி மாவட்டத்தை துவக்கி வைத்து அதற்கு வ.உ சிதம்பரனார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தூத்துக்குடி மாவட்டமாக பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.