India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 07.09.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் என்ற ஆசிரியர் சமீபத்தில் நல்லாசிரியர் விருது பெற்றார். இந்த நிலையில் அவரை பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தடம் மாறி செல்கிறார். அவரை பாஜக கைவிட்டு விட்டது. எனவே விஜய் கட்சியில் சேர்ந்தாவது கரை சேர்ந்து விடலாம் என நினைக்கிறார். தமிழகத்தில் நடிகர்கள் பலர் கட்சி துவங்கினார்கள். ஆனால் எம்ஜிஆர் கட்சி மட்டுமே நிலைத்தது என்று அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 07.09.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக சுற்று சூழல் உயரிய விருதான, கிரீன் சாம்பியன் விருதினை பெற்றுள்ள தாமோதரனுக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரான கீதாஜீவன் நேற்று பாராட்டுக்கள், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சரிடம் வாழ்த்துக்களை பெற்ற அவர் மிகவும் பெருமிதம் அடைந்து அமைச்சர் கீதா ஜீவனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துள்ளார்.
தருவை குளத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த மாதம் 5 தேதி கைது செய்தது. மேலும் அவர்களுக்கு பல கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் அமைப்பு சார்பில் 9 தேதி தருவை குளத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினர் கலந்து கொள்வார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் இறால் மீன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இழுவை வலையில் ஆமை விலக்கு பொருத்தினால் மட்டுமே இறால் இறக்குமதி செய்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துவிட்டது. இதனால் தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவிற்கு இறால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் விலை பல மடங்கு சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் முறப்பநாடு காவல்துறையினர் முறப்பநாடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 9 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து 9 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசார் நேற்று லூர்தம்மாள் புரத்தில் உள்ள குடோன் ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 மூடை பீடி இலைகள், 2310 கிலோ மஞ்சள், 100 கேன்களில் ஆசிட் ஆகியவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ள ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் 403 ஊராட்சிகளில் இம்மாதம் ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.