India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பயின்று பள்ளி இறுதி தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேராதவர்கள், 8 முதல் 12ஆம் வகுப்பில் பயிலும் போது இடைநின்ற மாணவர்களுக்கான “உயர்வுக்குப்படி” வழிகாட்டல் நிகழ்ச்சியானது நாளை வஉசி கலை அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் உள்ள முத்து அரங்கில், இன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட வள அலுவலர் எஸ் மணி முன்னிலையில் நாற்பதாவது சமூகத் தணிக்கை உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக காற்று மாசுபாட்டைக் குறைத்து சாதனை படைத்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ( The Central Pollution Control Board -CPCB ) வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் சொந்த காரில் மட்டுமே செல்ல வேண்டும். வாடகை காரர்களுக்கு அனுமதி இல்லை. காவல்துறையின் அனுமதி சீட்டு ஓட்டி வாகனத்தில் இருக்க வேண்டும் என்றும் மது பாட்டில்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் குமார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நவீன் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 24 நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஐஏஎஸ் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் 24 நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (39). தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவர், தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ராஜுவை நேற்று கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இந்நிலையில், மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் அபராதம் இன்றி மீட்டு தர கோரியும் மத்திய மாநில அரசை வலியுறுத்தியும் இன்று மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உண்ணாவிரதம் மற்றும் கடைகளை அடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தெற்கு ரதவீதி பகுதியை சேர்ந்த ஆண்டனி நிஜய் – ஹசிபா தம்பதியரின் 1 (1/4) வயது மகன் கிரீஸ் எய்டன் என்ற குழந்தை நேற்று (செப்டம்பர் 8) மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, அருகே உள்ள வாளியில் வைத்திருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.