Tuticorin

News September 11, 2024

அமைச்சர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கினை இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

News September 11, 2024

வீடுகளில் திமுக கொடி ஏற்றுங்கள்- அமைச்சர்

image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான கீதா ஜீவன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: காஞ்சி தலைவர் என்று போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களில் கட்சி கொடி ஏற்றுவதுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளிலும் திமுக கொடி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 11, 2024

20 வீடுகளை திறந்து வைத்தார் கனிமொழி

image

கயத்தார் யூனியன் மானங்காத்தான் கிராமத்தில் எம்பி கனிமொழி ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் 20 தொகுப்புகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர்மைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன், பஞ்சாயத்து தலைவி செல்வி ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.

News September 11, 2024

தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இன்று (செப். 11) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் செப்.6 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 11, 2024

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு பிற்பகல் ஒத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது வழக்கினை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அப்போது ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பெருமாள் சாமியிடம் விசாரணை நடைபெற உள்ளது.

News September 11, 2024

தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அமைச்சர் நினைவஞ்சலி

image

ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காகப் போராடிய சமூக நீதிப் போராளியாக உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன் இன்று தனது வலைதளப்பக்கத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு நினைவஞ்சலியை பதிவு செய்துள்ளார்.

News September 11, 2024

தூத்துக்குடி டூ திருவனந்தபுரம் விரைவில் ரயில் சேவை

image

தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு தற்போது பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில், குழித்துறை வழியாக கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்திற்கு, இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதற்கு ரயில்வே அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.

News September 11, 2024

பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளுக்கு தீர்வு காண தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.14 அன்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

14 ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

image

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு & மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படி தூத்துக்குடியில் வரும் செப்.14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட 6 அமர்வுகளில் உள்ள சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2024

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாளை (செப்.11) மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மேலும் புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை இம்முகாமில் சமர்ப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!