Tuticorin

News September 13, 2024

தூத்துக்குடி ஆசிரியர்கள் 2 பேர் பலி

image

மதுரையில் நேற்று முன்தினம் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணி பகுதியை சேர்ந்த சிங்க துரை என்பவருடைய மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா பேரிலோவன் பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News September 13, 2024

நடிகைகள் பிரச்சனை குறித்து அமைச்சர் பதில்

image

கோவில்பட்டியில் நேற்று செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் திரைப்படத்துறை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு கமிட்டி உள்ளது; அதில் மனநல மருத்துவர் உள்ளார்; எந்த நேரத்தில் புகார் தெரிவித்தாலும்> நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

News September 13, 2024

ஆத்தூர் போலீஸ் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபரிடமிருந்து பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 12, 2024

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாதம் தோறும் நடைபெறும் சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(செப்.13) கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 12, 2024

தூத்துக்குடி TMB-யில் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் LAW OFFICER போன்ற பல்வேறு பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு இன்று (செப்.12) வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களை அறிய https://www.tmbnet.in/tmb_careers/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் செப்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு வங்கியின் நிர்வாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

தூத்துக்குடி: தசரா திருவிழா – அக்.,3ல் கொடியெற்றம்

image

தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் கொடியேற்றம் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் இராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தசரா திருவிழா அக்.,3ல் தொடங்கி 13ஆம் தேதி இரவு வரை நடைபெற உள்ளது. திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை (செப்.13) ஆலோசனை நடைபெற உள்ளது.

News September 12, 2024

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓர் தகவல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்களுக்கு நாளை (செப்.13) தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் வைத்து பணியாளர் நாள் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களில் ஊழியர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ஒரு கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

image

தூத்துக்குடி வட பாகம் போலீசார் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த மேத்யூ, சுதர்சன், செல்வம், சுபாஷ் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை செய்கையில் அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

News September 12, 2024

விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்த எஸ்பி உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்களிடம் போதை பொருட்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும் காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

News September 11, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 11.09.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!