India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தப்படும் குரூப்-2, 2ஏ-ல் உள்ள பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தூத்துக்குடியில் தேர்வு மையங்களான, புனித மரியன்னை மேல்நிலை பள்ளி, வ.உ.சி கலை கல்லூரியினை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி பீச் ரோட்டில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு சங்கர் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற வாலிபரை மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர். இதில் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனையடுத்து பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்ட இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக விருது பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், முதுநிலை வருவாய் அலகில் உள்ள ஆய்வாளர்கள் 24 பேருக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவர் அஜய் சீனிவாசன் நேற்று(செப்.13) உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (70). இவரது மகன் பிரபாகரன் (35). கடந்த 2017ஆம் ஆண்டு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மகன் பிரபாகரன் தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தை ராஜபாண்டி அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் ராஜபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று (செப்.13) தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதளத்தில் வரும் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி உங்கள் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிராதீர்கள்.
இதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு சைபர் குற்றங்களில் சிக்க நேரிடலாம். விழிப்புடன் செயல்படுவீர், சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வீர் என தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை களையும் வகையில் பகுதி சபா கூட்டங்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில் திருக்குறளை உதாரணம் காட்டி மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது தனது கருத்தினை பதிவிட்டுள்ளார் அதில் ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ என்கின்றது திருக்குறள். எனவே மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “திமுகவை துவங்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தங்கள் வீடுகள் தோறும் திமுக கொடியை ஏற்ற வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.