India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பானை சேர்ந்த மியூகி என்ற பெண்ணை தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜப்பானில் பணிபுரிந்து வரும் ராஜேஷ், ஜப்பானீஸ் மொழியை கற்றுக்கொள்ள பயிற்சி மையத்திற்கு சென்றபோது, இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்து முறைப்படி நடுவக்குறிச்சியில் உள்ள அவரது கிராமத்தில் நேற்று (செப்.15) திருமணம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல்” பண்பாட்டின் குறியீடு. உரிமை போரின் முன்னோடி. தமிழ்நாட்டின் அடையாளம். திராவிட மாடலின் தொடக்கம். சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமையும் கொள்கையாகக் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவிற்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல குட்கா கடத்தல் மன்னன் கனகலிங்கம் மாங்காட்டில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கனகலிங்கம் மீது பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், கானத்தூர், தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. கடந்த மாதம் பூந்தமல்லியில் லாரியில் 10 டன் குட்கா சிக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த கனகலிங்கத்தை மது விலக்கு போலீசார் மாங்காட்டில் வைத்து இன்று (செப்.15) கைது செய்தனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக பல்வேறு விசை படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த இரு தினங்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் உணவு பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறையின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக 1098 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு, நேற்றைய வலைதளப்பக்கத்தில் இந்த விழிப்புணர்வு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்து விட்டு இன்று சென்னை திரும்பினார், சென்னை திரும்பிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், “மிலாடி நபியை முன்னிட்டு 17.09.2024 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிம தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்; மதுபான விற்பனை கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அக்டோபர் 3ல் புகழ்பெற்ற தசரா விழா துவங்குகிறது. தசரா திருவிழாவையொட்டி, வேடமணிந்த பக்தர்கள் இரும்பால் ஆன வாள் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது என்றும், ஜாதி அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணியக் கூடாது என்றும், தெருக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது ஆபாச பாடல்களை ஒளிபரப்ப கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.