Tuticorin

News September 17, 2024

தூத்துக்குடி: 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ஆம் தேதி காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று (செப்.17) தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

தூத்துக்குடியில் பிரபல கஞ்சா கடத்தல் ரவுடி கைது

image

தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் பொன் முனியசாமி. இவர் மீது தூத்துக்குடி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று (செப்.16) தென்பாகம் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பொன் முனியசாமியை விசாரணை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News September 17, 2024

தூத்துக்குடியில் சரக்கு பெட்டகம்: கடல் சார் புதிய நட்சத்திரம் – மோடி

image

தூத்துக்குடி சா்வதேச சரக்குப் பெட்டக முனையம் தொடக்க விழா வஉசி துறைமுகத்தில் நேற்று(செப்.16) நடந்தது. இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் மோடி உரையாற்றிய அவர் கூறியதாவது: இந்த நாளானது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். தூத்துக்குடியின் இந்தப் புதிய சா்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் சாா்ந்த உள்கட்டமைப்பின் ஒரு புதிய நட்சத்திரம் ஆகும் என்றார்.

News September 17, 2024

மாணவர்களிடம் பெரியார் பேசட்டும் – கனிமொழி எம்.பி

image

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று(செப்.17) கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் – பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும். வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும். மாணவர்களிடம் பெரியார் பேசட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்

News September 17, 2024

மிலாடி நபிக்கு அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து

image

உலகம் முழுவதும் இன்று(செப்.17) மிலாடி நபி கொண்டாடப்படுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தின் MLA, தமிழக அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக உள்ள கீதா ஜீவன் இன்று தனது வலைதள பக்கத்தில், நபிகள் நாயகம் பிறந்த நன்னாளில் உலகில் சமத்துவமும் சகோதரத்துவமும் தழைத்து ஓங்கட்டும். இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

News September 17, 2024

திருச்செந்தூரில் வரும் 18ல் உயர்வுக்கு படி நிகழ்ச்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பில் இடைநின்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி எழுதாத மாணவர்களை மீண்டும் கல்வி பயில வைக்கும் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் 18ஆம் தேதி திருச்செந்தூர் ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (செப்.16) தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

தூத்துக்குடி: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

புகைப்பட கண்காட்சி போட்டிக்கு இணையதளம்

image

தூத்துக்குடி சங்கர பேரியில் உள்ள திடலில் ஐந்தாவது புத்தகத் திருவிழா அக்.,3ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த திருவிழாவை ஒட்டி புகைப்பட கண்காட்சிக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பதிவு செய்வதற்கான இணையதளத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (செப்.16) துவக்கி வைத்தார்.

News September 16, 2024

கி.ரா நினைவு இல்லத்தில் ஆட்சியர் மரியாதை

image

கோவில்பட்டியில் அமைந்துள்ள கி ராஜநாராயணன் நினைவு அரங்கில் தமிழக அரசின் சார்பாக, 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், கோட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் நகர மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், வட்டாட்சியர் சரவணபெருமாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News September 16, 2024

தூத்துக்குடியில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இன்று வெப்பநிலை சற்று அதிகரித்துள்ளது. கோடைகாலம் போல் வெயில் மீண்டும் வறுத்தெடுத்து வருவதால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. 2 சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!