India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (செப்.18) மங்கையர்கரசி என்ற பெண், எஸ்பியிடம் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும், ஒருவர் தன்னிடம் பணத்தை வாங்கி கொண்டு அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார். இதில் சந்தேகம் அடைந்த எஸ்பி விசாரித்ததில் அவர் போலி புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குபதிவு செய்து அப்பெண்ணையும் அவருடன் வந்தவரையும் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரூரணி நீராவி ஊரணியில் 9.3.2024 அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது, குழந்தைகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை எனக்கூறி நீதிபதி வழக்கை அக்.3க்கு ஒத்திவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 இல் போராடியவர்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட 3 வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவரான கண்ணன் என்பவருக்கு துணை வட்டாட்சியர் பதவியில் இருந்து தற்காலிக வட்டாட்ச்சியராக பதவி உயர்வு அளித்திருப்பது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில் அவர்களின் பரோல் மனு இன்று (செப்.18) தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் பரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 9ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான எந்தவித அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று (செப்.18) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட அலுவலகங்களில் 7 நாட்களுக்கு முன்பாக அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 கிராம நிர்வாக அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. மேலும் 1 கிராம நிர்வாக அலுவலகத்தில் மின்சாரமே இல்லாமல் இயங்கி வருகிறது. எனவே மாவட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என, தூத்துக்குடி வருவாய் துறை கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பாகவும், பொது மக்களின் சார்பாகவும் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் இன்று(செப்.18) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக இக்கூட்டத்தில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.