India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள மாணவர்கள் 7 பேர் கண்மாய்க்கு குளிக்க சென்றதாகவும், அவர்களை அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பிரம்பால் தாக்கியதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாயகம் ஆசிரியரை நேற்று (செப்.19) பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிதியாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி துறைமுகம் காற்றாலை பிளேடுகள் சுமந்து செல்வதில் 38 கப்பல்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 26 கப்பல்களில் மட்டுமே காற்றாலை பிளேடுகள் சுமந்து செல்லப்பட்டதாக தூத்துக்குடி துறைமுக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் ஆகியவை இணைந்து வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற பெயரில் மாதந்தோறும் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாத குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று (செப்.20) அதிகாலை திரேஷ் புரம் கடற்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நான் முதல்வன் திட்டத்தின்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத அல்லது இடை நின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியாக வரும் 21ஆம் தேதி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று (செப்.19) தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் இன்று (செப்.19) வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொறுப்பேற்று இருக்கும் மாவட்ட எஸ்பி தற்போது நடைமுறைக்கு மாறாக அரசு அலுவலகங்களின் முன்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான கண்டனம் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா பகுதியிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடந்த 2010ஆம் ஆண்டு கடல் அட்டைகளை கடத்தி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று (செப்.19) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை (பிளஸ்-2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி ) விண்ணப்பத்தினை https://www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் 27.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், 9600693388, 9585655506, 9578912267, 0461-2311647 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று (செப்.18) நடைபெற்றது. இதில் காவல் நிலையத்தில் புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்காத மனுக்கள் 5 மற்றும் புதிய மனுக்கள் 77 என மொத்தம் 82 மனுக்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இவைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.