Tuticorin

News September 24, 2024

தசரா பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்தல்

image

உலக பிரசித்தி பெற்ற அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா பண்டிகையானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த திருவிழாவிற்காக, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த தசரா பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பகல் ரயில் இயக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News September 24, 2024

கோவில்பட்டியில் 25ஆம் தேதி உயர்வுக்கு படி நிகழ்ச்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இடைநின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி வரும் 25ஆம் தேதி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்படும்

image

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606) திருச்செந்தூரிலிருந்து இன்று இரவு 08.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2024

திமுகவில் இணைந்த பாஜகவினர் – அமைச்சருக்கு பாஜக கண்டனம்

image

பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் சுமார் 30 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் வேல் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கல்யாணசுந்தரம் என்பவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் கிடையாது. 200 ரூபாய் கொடுத்து ஆள் சேர்க்கும் வேலையை செய்ய வேண்டாம் என அமைச்சர் கீதாஜீவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

தூத்துக்குடியில் நெய்தல் திருவிழா மற்றும் புத்தகக் காட்சி

image

தூத்துக்குடியில் இன்று (செப்.23) நடைபெறவிருக்கும் நெய்தல் திருவிழா மற்றும் புத்தகக் கண்காட்சி குறித்த துண்டுப் பிரசுரங்களை கழக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி பேருந்துகளில் ஒட்டினார். உடன் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டனர்.

News September 23, 2024

கனிமொழி எம்பி பங்கேற்கும் இன்றைய நிகழ்ச்சிகள்

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (செப்.23) திருச்செந்தூர் தொகுதி கீரனூரில் பயணிகள் நிழற்குடையும், திருச்செந்தூரில் நியாய விலை கடையையும், தோப்பூரில் பூங்காவினையும், நங்கை மொழியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், பிச்சி விலையில் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

திமுக பொறியாளர் அணி பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

தூத்துக்குடியின் வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழக அளவில் திமுக பொறியாளர் அணியின் பொறுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேற்று (செப்.22) அறிவித்துள்ளார். அதற்கென பிரத்தியேக QR CODE உருவாக்கப்பட்டு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்திலும், அந்தந்த நகர, ஒன்றிய கழக அலுவலகங்களிலும் உள்ளது என்று தெரிவித்தார்.

News September 23, 2024

தூத்துக்குடி: இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.22) ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2024

மாணவர்களுக்கு அரசு திட்டம் கண்காணிக்க அதிகாரி

image

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் முறையாக மாணவர்களுக்கு சென்றடைவதை கண்காணிக்க மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இணை இயக்குனர் முனியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News September 22, 2024

தூத்துக்குடி பெற்றோருக்கு காவல்துறை அட்வைஸ்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இன்றைய வலைத்தள பக்கத்தில் குழந்தைகளின் நடத்தை, அவர்கள் பயன்படுத்தும் செல்போன் ஆகியவற்றை பெற்றோர்கள் தவறாமல் கண்காணிக்க வேண்டும். சரி – தவறு என்ற வித்தியாசம் தெரியாத இளம் வயதினரையே போதை பொருள் கடத்தல் கும்பல் குறிவைக்கிறது. ஆதலால் பெற்றோர்களாகிய நீங்கள் விழிப்புடன் இருப்பது ஒவ்வொருவரையும் கடமை என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் அறிவுரை வழங்கியுள்ளனர்.

error: Content is protected !!