India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் பிரம்மோதஸவம் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்காக தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருப்பதிக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் அக்.10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து அக்.5ம்தேதி தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் வைத்து தனியார் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தவுள்ளது. இதில் 150 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.வழக்கு விசாரணையின் போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் தரப்பு வழக்கறிஞர் சிபிசிஐடி அதிகாரி அனில்குமாரிடம் குறுக்கு விசாரணை நடத்தினா். மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விரைவாக விசாரணை நடத்தி் முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டனர்.
கோவில்பட்டியை அருகே உள்ள செண்பகப்பேரியை சேர்ந்த பாண்டி(25) என்பவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மதன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர், இதில் சதீஷின் தங்கையை பாண்டி கேலி செய்ததால் நண்பர் மதனுடன் சேர்ந்து பாண்டியை கொலை செய்ததாக சதீஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2024 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் வட்டம் அம்மன் புரத்தைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையாரின் 21வது நினைவு தினம் வரும் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 11 மதுபான கடைகளுக்கு மட்டும் அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நாளை (செப்.25) காலை 10 மணிக்கு தெற்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 43,45,48 முதல் 60) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் இன்று (செப்.24) தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் இந்த ஆண்டிற்கான அலுவலர் பதவிக்கு கீழ் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை வேண்டி வரும் 30ஆம் தேதிக்குள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று (செப்.24) தகவல் தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா பண்டிகையானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த திருவிழாவிற்காக, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த தசரா பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பகல் ரயில் இயக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.