India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் அவருடன் இருந்தார். சந்திப்பில் பல்வேறு அரசியல் சம்பந்தமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
“முன்னணி வங்கிகளில் இருந்து ரிவார்டு தருவதாக கூறி, உங்களுக்கு வாட்ஸ்அப்பில் ரிவார்டு லிங்க் மற்றும் APK file -யை சைபர் மோசடி நபர்கள் அனுப்புவர். அதை உங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்தால், உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்து விடுவார்கள். மேலும், உங்களுடைய வாட்ஸ்அப் செயலி ஹேக் செய்யப்படும்” என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.27) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு துறை சமீபத்தில் 51 வகையான பாராசிட்டமால் மாத்திரைகள் தரமற்றவை என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளது. எனவே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இத்தகைய பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரை செய்யக்கூடாது என்று தூத்துக்குடி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. வழக்கினை அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் வைத்து ஆஸ்திரேலியா நாட்டின் கவுன்சில் ஜென்ரல் சிலாய் சாக்கி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை வளர்ச்சி சம்பந்தமாக அமைச்சருடன் கலந்துரையாடினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள், செயற்கை கால்கள், உதவித்தொகை, காது கேட்கும் கருவி போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 4,436 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைநகர் டெல்லிக்கு நேற்று(செப்.26) வருகை தந்துள்ளார். முதல்வர் அவர்களை தூத்துக்குடி எம்பி கனிமொழி சிறப்பான வரவேற்பு அளித்து வரவேற்றார். அவருடன் தமிழக எம்பிக்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் விவரம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, வட்டாட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு திட்டப்பதிவு முகாம் இம்மாதம் இறுதியில் இருந்து நடைபெற இருக்கிறது. எனவே இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.